ரோஜா படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, ஜென் டில்மேன், இந்தியன், காதலன், கிழக்கு சீமையிலே, மே மாதம், உழவன், புதிய முகம், என தன் ஆரம்ப கால படங்களின் மூலம் ஒரு இசை சாம்ராஜ்யமே நிகழ்த்தியவர் ஏ.ஆர் ரஹ்மான்.

ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் மூலம் ஆஸ்கார் விருது பெற்றதனால் உலகம் முழுவதும் தெரியும் தமிழரானார்.

புகழேணியின் உச்சியில் இசையுலகில் மிக பிஸியாக தமிழ், ஹிந்தி, ஆங்கில படங்கள் ஆல்பங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர் ரஹ்மானின் பிறந்த நாள் இன்று. இதை ஒட்டி பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஏ.ஆர் ரஹ்மானின் மகன் ஏ.ஆர் அமீனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீங்கள்தான் எல்லாம் எனக்கு நண்பர், ஆசிரியர் அனைத்தும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.