இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமானவர் இவரது பாடல்களுக்கும் இசைக்கும் உலகம் முழுவது ரசிகர்கள் மிக அதிகம். வெளிநாடு வாழ் தமிழர்களுக்காகவும் ரஹ்மானின் இசையை ரசிக்கும் அமெரிக்காகாரர்களையும் மகிழ்விப்பதற்காக ரஹ்மான் தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

வரும் ஆகஸ்ட் மாதம் சூறாவளி சுற்றுப்பயணமாக அமெரிக்காவில் உள்ள ஓக்லாந்து, லாஸ் ஏஞ்சல்ஸ்,அட்லாண்டா, வாஷிங்டன், நியூயார்க், சிட்டில், டல்லாஸ் உள்ளிட்ட அனைத்து அமெரிக்க பெருநகரங்களிலும் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் ரஹ்மான்.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் முழுவதும் அமெரிக்காவில் ரஹ்மானின் கச்சேரிதான்