கடந்த  ஞாயிறு அன்று சென்னை  நேரு விளையாட்டு அரங்கில் விஜய் நடித்த மெர்சல் படப்பாடல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் முழுவதும் ரசிகர்களால் திக்குமுக்காடித்தான் போனது. திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். வந்தவர்கள் எல்லாம் எவ்வளவு தூரம் ஜிங் ஜக் அடிக்க முடியுமோ அந்த அளவிற்கு அடித்துச் சென்றனர். என்ன நம்மால்தான் அதனை கேட்க முடியவில்லை.

இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ஆளப்பிறந்தவன் தமிழன் என்ற பாடல்  எங்களோட அஸ்பிரேஷன். அதை நீங்க உண்மையாக்கணும் என்று விஜயை பார்த்து தன்பங்கிற்கு பேசினார். ரசிகர்கள் சத்தத்தால் அந்த வரிகள் சரியாக சென்றதா தெரியவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதனை கவனித்தால் ரகுமானையும் ஒரு லிஸ்ட்டில் வைத்துவிடுவார்கள் என்பதே உண்மை.