விண்வெளித்துறையில் இன்று இந்தியா மிகப்பெரிய சாதனையை செய்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொண்ட பிரதமர் மோடியை தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

இன்று காலை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று கலை 11.45 மணியிலிருந்து 12 மணிவரை மக்களிடம் ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேசப்போகிறேன் என அறிவித்தார். எனவே, மோடி என்ன சொல்லப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு பலருக்கும் எழுந்தது.

சமூகவலைத்தளங்களில் பலரும் புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என மோடி அறிவிக்கப் போகிறார் என கிண்டலடித்தனர். அது போல் எதுவும் நடந்து விடுமோ என பலரும் பீதியில் ஆழ்ந்தனர்.

ஆனால், விண்வெளித்துறையில் இன்று மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது இந்தியா. விண்வெளியில் இந்தியாவின் செயற்கைக்கோளை இந்தியாவே சுட்டு வீழ்த்தியது என எதையோ சாதித்த வெறியுடன் அவர் பேச, இவ்வளவுதானா என மக்கள் பெருமூச்சு விட்டனர். அதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் பலரும் இதுகுறித்து கிண்டலடிக்க தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் “விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். அதேபோல் பிரதமர் மோடிக்கும் உலக நாடக தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் டிவிட் செய்துள்ளார்.