தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இந்த தோல்விக்கு காங்கிரஸ் சார்பாகப் பலக் காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அமேதி தொகுதியில் ராகுலே தோல்வியடைந்துள்ளதால் அவரின் தலைமையும் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  'உங்கள் அன்பிற்கு நன்றி சொன்னால் போதுமானதாக இருக்காது'- டிவிட்டரில் பிக்பாஸ் ஜனனி

காங்கிரஸின் தோல்விக்குப் பொறுப்பேற்று பல மாநிலத் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு டெல்லியில் கூடியது. இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியைத் தான் ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.