சமூக சேவைகளில் ஈடுபடும் – ரகுல் ப்ரீத் சிங்

 

மாநிலங்களில் பல  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக சேவைகளில் ஈடுபடுகின்றன. ஆந்திராவில் சில தொண்டு நிறுவனங்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் சொல்லித் தருவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றன.

மாற்றமாக இருங்கள் மாற்றத்தை சொல்லித்தாருங்கள் என இந்த முகாமில் ரகுல் ப்ரீத் சிங் ஆங்கிலம் சொல்லித்தரும் ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறார் . மேலும் இவர் ஆங்கிலம் பேச தெரிந்திருத்தல், அவரின் ஈடுபாடு மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே அவர் தேர்வு செய்யப்பட்டார்  என தொண்டு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

எனவே அங்கு சென்று மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இந்த கல்வி ஆண்டு முழுவதும் பயிற்சியாளர்கள் அதில் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என கூறப்படுகிறது.