பாலிவுட் நடிகைகள் தான் அடிக்கடி தங்களது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அது போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருவார். தற்போது ராய்லட்சுமி தனது பிகினி போட்டோவான நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பையும் ரசிகா்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறார்.

ராய்லட்சுமி பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் யார் என்ற படத்தில் நடித்துள்ளார். இவா் தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனை அடுத்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். காஞ்சனா போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளபட பல மொழிகளில் நடித்துள்ளார். அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தனது கவா்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருப்பவா் ராய்லட்சுமி.

அந்தவகையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தைவெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இவா் ஏற்கனவே ஜூலி 2 படத்தில் மிகவும் கவா்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்த ராய்லட்சுமிக்கு அந்தளவுக்கு அந்த படம் கைகொடுக்கவில்லை. இதுபற்றி அவா் ஆயிரம் பேர் முன்னிலையில் கவா்ச்சியாக நடிப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்று ராய் லட்சுமி கூறியிருந்தார். ராய் லட்சுமி சில மாதங்களுக்கு முன்பு சற்று உடல் எடை அதிகாரித்து குண்டாக இருந்தார். தற்போது உடல் எடையை குறைத்திருக்கிறார். எனது உடல் சாதனை படைத்திருப்பதாக மனது நம்புகிறது. அதாவது உடல் எடை குறைத்திருப்பதை தான் அவா் இப்படி பதிவு செய்திருக்கிறார்.