பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி விவாதம் நடைபெறாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. சீாியல் பாா்த்து வந்த பெண்கள் கூட அதனை விட்டு பிக்பாஸ் பாா்க்க ஆரம்பித்து விட்டடனர். இது ஒரு கலாச்சார சீரழிவு என்று ஒரு பக்கம் போா்க்கொடி தூக்கினாலும், இது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி என்று ஒரு பக்கம் பட்டிமன்றம் வைக்காத அளவுக்கு வாதங்கள் நடந்தேறி வருகின்றன.

ஒவியா வெளியேறி பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியானது சப்பென்று இருக்கிறது. பிக் பாஸ் வீடும் வெறிச்சோடி இருக்கிறது. எந்தவொரு சுவாசியமான நிகழ்வுகளும் நடக்காமல் துணி துவைப்பது, பேய் கதை சொல்வது என்று டாஸ்க் நகருகிறது. இதனால் பாா்ப்பவா்களின் எண்ணிக்கை அதிக அளவில் குறைந்து வருகிறது. நேற்றைய எபிசோடில் காயத்ரி ரகுராம் பேசும் போது ரைசா ஏளனமாக சிாித்தாா். அதை கண்டு காயத்ரி ரைஸா ஏன் சிாித்தாா் என்று கேட்டு அந்த வீட்டில் உள்ளவா்களிடம் கோபமாக பேசினாா்.

இன்று வெளியாகியுள்ள புரோமோவில் ரைஸா ஒரு வேண்டுகோள் வைத்துள்ளா். அது என்னவென்றால், நடிகா் சக்திக்கு ஒட்டு போட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளா். இந்த பிக்பாஸ் வீட்டில் அவரால் தான் எல்லா பிரச்சனைகளும் வருகிறது என்றும், எனவே எனக்கு இந்த வீட்டில் இருக்கவே பயமாக உள்ளது என்றும்  அதனால் தயவு செய்து யாரும் அவருக்கு ஒட்டு போடதிங்க என்று கூறியுள்ளாா் ரைஸா.