தூங்க முடியாது எனில் வெளியே அனுப்பி விடுங்கள் – ஆட்டத்தை தொடங்கிய ரைசா

02:47 மணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தூக்கத்திற்காக நடிகை ரைசா சண்டை போடும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எது இருக்கிறதோ..இல்லையோ. சண்டை இருக்கிறது. அதுவும் காயத்ரி மற்றும் ரைசா ஆகியோருக்கு இடையே உருவாகியுள்ள மோதல் கடந்த சில நாட்களாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூக்கத்திற்காக பிக்பாஸுடன் ரைசா சண்டை போட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இன்று இரவு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், பகலில் தூங்கிக் கொண்டிருக்கும் ரைசாவை நாய் குறைப்பு சத்தம் போட்டு எழுப்பிவிடுகிறார் பிக்பாஸ். இதனால் ஆத்திரம் அடைந்த ரைசா கோபத்துடன் காணப்படுகிறார்.

இதையடுத்து, தனி அறையில் அவரை அழைத்து பேசும் பிக்பாஸ், விதிமுறைகளின் படி பகலில் தூங்கக்கூடாது என தெரிவிக்க, தூங்க முடியாத இடத்தில் நான் இருக்க முடியாது. என்னை அனுப்பி விடுங்கள் என கத்திவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார் ரைசா.

எனவே, இன்றைய நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், சில திருப்புமுனைகளுக்கு வழிவகுக்கும் எனத் தெரிகிறது.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com