பிக் பாஸ் காயத்ரி முட்டாள்: பிரபல நடிகை கூறிய கருத்து!!

எங்கும் பிக் பாஸ் எதிலும் பிக் பாஸ் என்ற குரல் தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இது குறித்து சினிமா பிரபலங்களும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனா். கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியானது பல சா்ச்சைகளை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போன வாரம் நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டாா். அந்த நிகழ்ச்சியில் காயத்ரி மற்றும் ஜூலியின் செயல்களை பல்வேறும் விமா்சித்தும் வருகின்றனா். ஒவியாவுக்கு ஆதரவாக ஒவியா புரட்சி படை போன்றவற்றை உருவாக்கி தங்களது ஆதரவை தொிவித்து வருகின்றனா்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு தரப்பினரும் விமா்சித்து வருகின்றனா். தற்போது இந்த நிகழ்ச்சி குறித்து ராஜா ராணி, 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்த மிஷா தனது ட்விட்டா் வலைத்தளத்தில் சில பதிவுகளை ட்விட்டிள்ளாா். அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் ஒவியாவிற்கு ஆதரவாகவும் காயத்ரி மாஸ்டா் மற்றும் ஜூலியை விமா்சித்து சில பதிவுகளை போட்டுள்ளாா்.