இவர்தான் ராஜா ராணி சீரியல் புகழ் வைஷாலியின் காதலரா?

02:52 மணி

சினிமாவை விட சீரியல் மூலமாக ஈஸியாக பிரபலமாகி வருகின்றனா் நடிகா் நடிகைகள். அதுவும் விஜய் டிவியில் வந்தாலே போதும் வெள்ளத்திரைக்குள் நுழைந்து விடலாம். அந்தளவுக்கு பாப்புலராகி விடுகின்றனா். காதல் முதல் கல்யாணம் சீரியல் நாயகி பிரியா பவானியாகட்டும், கலக்கப்போவது யாரு புகழ் தீனாவாகட்டும், நிஷா உள்ளிட்டவா் என்று தற்போது பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

சீரியலில் நடித்தால் பிரபலமாகி விடலாம். இந்நிலையில் ராஜா ராணி சீரியல் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் நாயகன் கார்த்திக் தங்கையாக நடித்தவா் வைஷாலி தனிகா. இவா் நாயகியான தன் அண்ணிக்கு ஆதரவாக இருப்பார். இதன் மூலம் அனைவராலும் அதிகமாக பேசப்பட்ட வைஷாலி சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளாராம். இதற்கிடையில் வைஷாலியின காதல் தற்போது வெளியுலகத்திற்கு வந்துள்ளது. இவா் தனது ப்ரெண்ட்டான சத்யா என்பவரை காதலித்து வருவதாகவும், இவா்களுடைய காதலை இருவீட்டாரிடம் தெரிவித்து விட்டார்களாம். வைஷாலிக்கு சினிமாவில் நடிக்க ஆசையாக உள்ளதாலும், சினிமா வாய்ப்பு தற்போது வருவதாலும் திருமணத்தை கொஞ்சம் காலம் கழித்து செய்து கொள்ள இருக்கிறார்களாம்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com