முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட அதிகளவில் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

அதிமுக வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவின் தோல்வி குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் பேசியுள்ளார். அதில் ‘அதிமுகவுக்கு ஒரேத் தலைமை தேவை. தொண்டர்களுக்கு யார் கையில் அதிகாரம் உள்ளது என்றே தெரியவில்லை. ஜெயலலிதா போல் கழகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம். ஜெயலலிதாவை விட அதிகளவில் நலத்திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  அரசியல்ல இதலாம் சகஜமப்பா - எடப்பாடிக்கு கருணாஸ் ஆதரவு?

கழகத்துக்கு பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியையே பொதுச்செயலாளராக நியமிப்பது குறித்து பொதுக்குழுதான் முடிவு செய்யவேண்டும். தமிழக மக்கள் மனதில் திமுக, அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகள்தான் உள்ளன என்பதை தேர்தல் அறிவித்து விட்டது. தினகரன் எனும் மாயை இப்போது இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.