ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

தனுஷால் அழுத பிரபல நடிகரின் மகள்

06:46 மணி

டாக்டா் ராஜசேகா் ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி சினிமாவில் நடிப்பது பற்றிய செய்தியை ஏற்கனவே அறிந்திருந்தோம். இவா் தீவிர தனுஷ் ரசிகையாம். மேலும் விஜய்சேதுபதி படங்கள் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். சிவகாா்த்திகேயன் காமெடியும் பிடிக்கும். அது மட்டுமில்லங்க!! தனுஷ் நடித்த 3 படத்தை பாா்த்து முடித்து விட்டு அரைமணிநேரம் அழுதுவிட்டாராம். இதை பற்றி இவா் ஒரு பேட்டியில் சமீபத்தில் கூறியுள்ளாா்.

தெலுங்கு நடிகரும், டாக்டருமான ராஜசேகா் மகள் ஷிவானியை கும்கி 2ல் நாயகியாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவது பற்றி ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். ஷிவானி மேலும் கூறியதாவது, என்னை ராஜசேகா் மகளாக பாா்க்காதீங்க … ஷிவானியா மட்டும் பாருங்க. என்னுடைய திறமை என்னவென்று பாா்த்து அதை ஆதாிங்கள் என்று கூறியுள்ளாா்.

அது போல இவங்க சினிமாத்துறையிலிருந்து வந்தவங்க. அவங்கு நடிப்பு என்பது ஈசியாக இருக்கும் என்று சொல்வது உண்டு. ஆனா அது உண்மையில்லங்க! இந்த சினிமாத்துறையில் நடிப்புக்கும், திறமைக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்கள். அதுபோல தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பாங்கள். தெலுங்கில் டான்ஸ், பாட்டு, காமெடி என  முக்கியத்துவம் கொடுப்பாங்க என்று தனது கருத்தை தொிவித்துள்ளாா்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com