கர்நாடகாவில் ரஜினிக்கு சொத்துக்கள் இல்லை – ராஜ்பகதூர் விளக்கம்

கர்நாடக மாநிலத்தில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு முதலீடுகளோ, பெரிய அளவில் சொத்துகளோ கிடையாது என ரஜினியின் நீண்ட கால நண்பர் ராஜ்பகதூர் கூறியுள்ளார்.

சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் பற்றி பேசியதுதான் தற்போது ஹாட் நியூஸ். அவருக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்களும், எதிராக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ரஜினியின் நீண்ட கால நண்பர் ராஜ்பகதூர் “ ரஜினி விரைவில் அரசியலுக்கு வருவார். தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என அவர் விரும்புகிறார். பலர் நினைப்பது போல் அவர் கர்நாடகாவில் சொத்துக்களை வாங்கி குவிக்கவில்லை. இங்கு வந்தால் தங்குவதற்கு இரண்டு வீடுகளை மட்டுமே அவர் வாங்கியிருக்கிறார். மற்றபடி அவரது அனைத்து சொத்துகளும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.

அவரின் மூதலீடுகள் அனைத்தும் நியாயமான முறையிலேயே செய்து வருகிறார். அவர் அரசியலுக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சி நடத்துவார் என்பதற்கு இதுவே ஆதாரம். அவரிடமிருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்” என அவர் தெரிவித்தார்.