நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி வருகிறார். இந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் 8ஆம் தேதி இக்கட்சியின் சார்பில் சென்னையில் மகளிர் தின விழாவை அடுத்து பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கமல் கட்சி குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியபோது, ‘அதிமுகவை அழிக்க நினைக்கும் கமல் கட்சியை கருவிலேயே அழிப்போம். கமல்ஹாசனின் கொள்கைகள் அனைத்தும் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத கொள்கைகள்’ என்று கூறினார்