பிரபல எழுத்தாளர் ராஜேஸ்குமார் இவர் பிரபல வார இதழில் எழுதிய வெல்வெட் குற்றங்கள் நாவல் மலேசிய விமானம் மாயமானதை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதை இந்த கதை தொடராக வந்தபோதே

இக்கதையை படமாக்க வேண்டும் என பிரபுதேவா ஆர்வம் கொண்டதாகவும் கதை தொடராக வந்தபோதே பிரபுதேவா பாராட்டினார் என்றும் ஹிந்தியில் இந்த படத்தை சரியான தயாரிப்பாளர் கிடைத்தால் பிரபுதேவாவே இயக்க இருப்பதாக கூறியதாகவும் சினிமாவில் நேரம் காலம் முக்கியம் சரியான தயாரிப்பாளர் இதுவரை அமையவில்லை என நினைக்கிறேன் என ராஜேஸ்குமார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அமிதாப் பச்சனுக்கு டான்ஸ் கற்றுத் தருகிறாரா பிரபு தேவா?

மேலும் இக்கதையில் 25 டுவிஸ்டுகள் உள்ளதெனவும் இக்கதையில் மகிழ்ந்த பிரபுதேவா ஸ்க்ரிப்டை ஆங்கிலத்தில் முழுவதும் அனுப்பி வைக்கும்படி கூறியதால் அனைத்தையும் ஆங்கில மொழி பெயர்ப்பாளர் ஒருவரை வைத்து மொழி பெயர்த்து அனுப்பியதாகவும் விரைவில் இப்படம் தயாரிக்கப்படும் நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.