ரஜினியின் 2.0 படத்தை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஷங்கரின் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 2.0. இதில் ரஜினி தவிர, எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தியாவிலேயே ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள முதல் படம் 2.0 ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ஆனால், படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால், இப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியிடப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  டிட்லி புயலை தொடர்ந்து இந்த வருடம் ஏ.ஆர் ரஹ்மான் புயல் - வித்தியாச பெயர்

ஆனால், படத்தின் டீசரை நவம்பரிலும், டிரைலரை டிசம்பரிலும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதேபோல், இப்படத்தின் விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

இப்படம் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பல மொழிகளில் வெளியாகிறது. முக்கியமாக, சீனாவில் மட்டும் 1500 தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது. அதற்காக சீன மொழியிலும் படம் டப் செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  2.0 டீசர் லீக்: ஷங்கரின் மெளனம் ஏன்?