துபாயில் இசை, ஐதராபாத்தில் டீசர், சென்னையில் டிரைலர்: 2.ஓ புதிய அப்டேட்

02:46 மணி

ரஜினி – ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கிற ‘2.ஓ’ படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தை பற்றிய புதிய அப்டேட் ஒன்றை படத்தை தயாரிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Loading...

அதாவது, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள 2.ஓ. படத்தின் பாடல் வெளியீட்டை வருகிற அக்டோபர் மாதம் துபாயில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். அதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் டீசரும், சென்னையில் டிரைலரையும் அடுத்தடுத்து வெளியிடவிருக்கிறார்களாம். அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி இப்படம் வெளியிட தயாராகி வருகிறது.

ரஜினியின் ‘எந்திரன்’ பட வரிசையில் வெளிவர காத்திருக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் வியாபாரம் பெரிய அளவில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com