ஆந்திராவில் தற்போது பட்டையை கிளப்பி வரும் படம் அர்ஜூன் ரெட்டி. சுமார் 4 கோடியில் தயாரான இப்படம் கிட்டத்தட்ட 40 கோடி வரை வசூலில் கலக்கி வருகிறது. இதையடுத்து இப்படத்தின் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நடந்தது. இதில் தனுஷ் வெற்றி பெற்றார்.இப்படத்தை அவர் நடிப்பாரா இல்லை வேறு எவரையும் நடிக்க வைத்து தயாரிப்பாரா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

இந்த நிலையில் இப்படத்தினை பார்க்க ரஜினி வரும்பியுள்ளார். இதையடுத்து அவருக்காக  இப்படம் பிரத்யேகமாக காட்டப்பட்டது. படத்தின பார்த்து பாராட்டிய ரஜினி தனுஷுக்கு சில அட்வைஸ்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. அதாவது இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம். உங்களுக்கு என்று ஒரு நல்ல பெயர் உள்ளது என்றும் கூறினாராம். ரஜினி தனுஷுக்கு அட்வைஸ் செய்த காரணம் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஏடாகூட காட்சிகளே என்று கூறப்படுகிறது.