ரஜினி, கமலின் அரசியலுக்கு வந்தால் மிக கடுமையாக உழைக்க வேண்டும் என்று நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார்.

நடிகை விஜய்சாந்தி 1990களில் தமிழ்,தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரின் அதிரடி நடிப்பை பார்த்த மக்கள் தென்னிந்தியாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்தனர்.பின் 1998ல் படவாய்ப்பு குறைந்ததால் அரசியலில் இறங்கினார்.

இந்த நிலையில் ரஜினி, கமலின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த நடிகை விஜயசாந்தி,திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்.  நான் அரசியலுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. தெலங்கானாவுக்காக இருபது ஆண்டுகள் போராடி இருக்கிறேன். இன்று எனது கனவு நிறைவேறியிருக்கிறது.

எனவே ரஜினி, கமல் யார் வந்தாலும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.