ரஜினிக்கு செட் ஆகுமா வெற்றிமாறன் மேக்கிங்?

04:39 மணி

ரஜினிகாந்த் தற்போது காலா படத்தில் நடித்து வருகிறார். கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை அடுத்து ரஜினி தொடந்து படங்களில் நடிப்பாரா அல்லது அரசியல் பிரவேசமா என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் காலா படப்பிடிப்பின்போது இயக்குனர் வெற்றி மாறன் ரஜினியிடம் கதை ஒன்றை சொன்னதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த தகவல் உண்மை என்றே சொல்லப்படுகிறது. அந்த படத்தையும் தனுஷ் தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

Loading...

ரஜினியை பொறுத்தவரை அவருக்கென்று தனி ஸ்டைல்  உண்டு. ரஞ்சித் கூட கபாலி படத்தில் அவருக்கான அந்த ஸ்டைலை வைத்தே கையாண்டிருப்பார். வெற்றி மாறன் ஒரு சிறந்த இயக்குனர் என்பது மறுப்பதற்கில்லை. அவரது பொல்லாதவன்,ஆடுகளம் போன்றவை சிறந்த உதாரணங்கள். இதுவரை அவர் தனுஷை தவிர பெரிய நடிகர்கள் எவரையும் இயக்கியதில்லை. வெற்றிமாறனுக்கென்று ஒரு மேக்கிங் ஸ்டைல் உண்டு. அது ரஜினிக்கு பொருந்துமா என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அப்படியே இந்த கூட்டணி ஏற்பட்டா மீண்டும் ஒரு ஜானி, முள்ளும் மலரும் மாதிரியான திரைப்படம் கிடைப்பது மட்டும் உறுதி.

(Visited 2 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com