தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரஞ்சித் தான் ரஜினி சாரை வைத்து இயக்கியது என்னாலேயே நம்ப முடியாதது என்று கூறியுள்ளார்.

கோவா பட சூட்டிங்கின் போது மலேசிய கேங்ஸ்டர்ஸ் பற்றி தான் உருவாக்கி வைத்திருந்ததாகவும், தன்னிடம் செளந்தர்யா ரஜினிகாந்த் படம் இயக்க வேண்டும் என்று கேட்டபோது ரஜினியை இயக்க பயம் கலந்த தயக்கம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  சாய்பல்லவியின் ஸ்பெஷல் வாழ்த்து

ரஜினிக்கு கபாலி கதையை செளந்தர்யா சொன்ன பிறகு, நீங்களும் வந்து ஒருமுறை அப்பாவிடம் கதை சொல்ல வேண்டும் என்றவுடன் மிகவும் தயங்கினாராம்.

ஏன் இந்த தயக்கம் ரஜினியை வைத்து இயக்குவதற்கு என நெறியாளர் கேட்டதற்கு அவர் பெரிய மாஸ் ஹீரோ, அவர் மத ரீதியான சில கருத்துக்கள் கொண்டவர் அந்த கருத்துக்கள் எனக்கு பிடித்ததில்லை. பெரிய நடிகர் என்ற பயம் இதெல்லாம் சேர்ந்துதான் அவரை வைத்து இயக்குவதற்கு முதலில் தயக்கம் இருந்தது.

இதையும் படிங்க பாஸ்-  ரிலீசானது தனுஷின் 'வடசென்னை' - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

வேண்டாம் என்று நினைத்த வேளையில் பெரிய நடிகரின் படம் விட வேண்டாம் நம் திறமையை காட்ட நல்ல சந்தர்ப்பம் விட்டு விட வேண்டாம் என்று அந்த நல்ல வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். ரஜினி சாரை வைத்து இயக்கியது என்னால் நம்பவே முடியாத அதிசயம் என்றார்.