கமல்ஹாசனும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள் என்று வெளியே சொல்லி கொண்டாலும் உள்ளுக்குள் இருவருக்கும் நடக்கும் பனிப்போரை வெகுசிலர் மட்டுமே அறிவர்

ரஜினிக்கு போட்டியாக கமலும், கமலுக்கு போட்டியாக ரஜினியும் அரசியலில் குதிக்கவுள்ள நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ என்ற படத்தை ஷங்கர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில் ‘முதல்வன் 2’ போன்ற படம் ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்கள் நடிக்க தயார் என்று ஷங்கரிடம் ரஜினி கூறியதாகவும், இதனால் ‘இந்தியன் 2’ படத்தை கிடப்பில் போட்டுவிட்டு ‘முதல்வன் 2’ படத்தின் ஸ்கிரிப்டை ஷங்கர் எழுந்த தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தையும் லைகா தயாரிக்கலாம் என தெரிகிறது.