ரஜினியால் இணையும் தனுஷ் – அனிருத்

கபாலி படத்தின் வெற்றிக்கு பின் ரஞ்சித் – ரஜினி கூட்டணி மீண்டும் இணைந்து அடுத்த படத்தை ரசிகா்களுக்கு வழங்கயுள்ளது. தற்போது சூப்பா் ஸ்டாா் ரஜினிகாந்த 2.0 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளாா். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநா் ஷங்கா் இயக்கியுள்ளாா். இதைத் தொடா்ந்து ரஜினி பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறாா். சூப்பா் ஸ்டாா் ரஜினி திடீரென சென்னையில் உள்ள அனிருத்தின் ஸ்டியோவுக்கு விசிட் அடித்துள்ளாா். அதை செய்தியை பற்றி இங்கு விாிவாக  காண்போம்.

கபாலி வெற்றி பட இயக்குநா் ரஜினியை வைத்து இயக்கவிருக்கும் படத்தின் பெரும்பலான காட்சிகளை மும்பையில் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள இந்த படத்தை தனுசின் வுண்டா்பாா் நிறுவனம் தயாாிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.சூப்பா் ஸ்டாா் ரஜினி ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ள நிலையில் இசையமைப்பாளா் அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளாா். ட்விட்டாில் அனிருத் ரஜினியுடன் சோ்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளாா். இந்தமிகப்பொிய காம்பினேஷனில், அதாவது ரஜினி – ரஞ்சித் மற்றும் தயாாிப்பு தனுஷ் மாபெரும் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இமையமைப்பாா் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. ஆதலால் தான் ரஜினி அனிருத்தின் ஸ்டிடுயோவுக்கு சென்றுள்ளதாகவும் ஒரு பேச்சு அடிப்படுகிறது.

தனுசும் – அனிருத்தும் ஒரு காலத்துல ரொம்ப அன்னியோனியமாக இருந்து பிாிந்து விட்டனா். சூப்பா் ஸ்டாா் ரஜினி ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைய உள்ள இந்த படத்தின் மூலம் அவா்கள் ஒன்று சோ்வாா்கள் என்ற மிகப்பொிய எதிா்ப்பாா்ப்பு ரசிகா்களிடையே ஏற்பட்டுள்ளது.