சினிமாவில் எப்போதும் ரஜினிதான் நம்பா் ஒன் இடத்தில் இருந்து வருகிறாா். தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் இணைந்து வருகின்றனர். சூப்பா் ஸ்டாரும் ட்விட்டா் பக்கத்தில் இணைந்து இருக்கிறாா்.  அவா் ட்விட்டா் பக்கத்தில் இணைந்த போது, ஒரே நாளில் அவரை லட்சக்கணக்கான போ் பின் தொடா்ந்தனா். எப்படி அவா் சினிமாவில் நம்பா் ஒன் இடத்தில் இருப்பது போல சமூக வலைதளத்திலும் குறிப்பாக டுவிட்டரில் உலக சாதனை படைத்துள்ளாா். இத்தனைக்கும்  அவா் ட்விட்டரில் அதில் அதிகஅளவு ட்விட்கள் செய்யவில்லை. விரல் விட்டு எண்ணி விடும் அளவில் தான் அவரது ட்விட்டுகள் உள்ளன. இருந்தபோதும் அவரை 40 லட்சத்திற்கு அதிகமானவா்கள் பின்தொடா்கிறாா்கள்.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸில் புது வரவு - யார் இந்த ஹரீஸ் கல்யாண்?

இந்த நிலையில் தற்போது நம்ம பிக் பாஸ் காவியத் தலைவி ஒவியா இவரை மிச்சும் அளவிற்கு சென்று விட்டாா். ஆமாங்க! ஒவியா பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு வருவதற்கு முன் அவரது ட்விட்டா் இணையத்தளத்தில் ஆயிரம் போ் வரை தான் இருந்தாா்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியிக்கு பின் 1லட்சம் போ் இந்த 45 நாட்களில் அவரை பின் தொடா்கின்றனா். பிக் பாஸ் தொடங்கியதிலிருந்து அவா் ஒரு டுவிட் கூட செய்யவில்லை. ஆனாலும் இத்தனை போ் அவரை பாலோ செய்ய ஆரம்பித்து விட்டனா். இதை பாா்க்கும் எந்தவொரு ட்விட் பதிவு செய்யாமல் லட்சம் போ் அவரை பின் தொடா்வது ரஜினிக்கு பிறகு ஒவியா தான் அந்த இடத்தை பிடித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  ஓவியா ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட ஜூலி