நடிகர் ரஜினிகாந்த் மன அமைதிக்காக அடிக்கடி இமையமலைக்கு சென்று தவம் செய்வார். ஆன்மீகத்தில் அதிக நாட்டமுடிய ரஜினிக்காந்த் அரசியலில் இறங்கி, ஆன்மீக அரசியல் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இப்படிப்பட்டவரால் இரண்டு கேள்விகளுக்கு கோபத்தை அடக்க முடியவில்லையே என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு திரும்பிய ரஜினி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் காவல்துறையையும், அரசையும் ஆதரித்து பேசுகிறீர்களே என கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ரஜினிகாந்த் முகத்தை கோபமாக வைத்து வெறிபிடித்தவர் போல, யே யார்யா என கத்திவிட்டு, வேறு கேள்வி இருக்கா என எரிச்சலடைந்து செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு கிளம்பினார்.

ரஜினியின் இந்த ஆவேசம் தற்போது விமர்சிக்கப்படுகிறது. இவ்வளவு வருஷம் இமயமலை போய் பாபாஜியை பார்த்து தவம் இருந்து ஆன்மிக அரசியல் முன்னேடுக்கிற இவராலையே ரெண்டு ரோஷமான கேள்விக்கு கோபத்தை அடக்கமுடியல? 25வருஷமா வாழ்க்கையை அடுத்த தலைமுறையை இழக்கும் அந்த தூத்துக்குடி மக்களின் அமைதி பெருசா இல்ல இவறுடையதா? என ஒரு டுவிட்டரில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் ரஜினியின் நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகிவிட்டது.