ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, அம்பாளை தரிசனம் செய்தார்.

நடிகர் தனுஷ், சினேகாவுக்கு ஜோடியாக நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு குற்றலாத்தில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பை பார்வையிட தனுஷின் மனைவியும் சினேகாவின் கணவரும் வந்திருந்தனர்.

இந்நிலையில் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்தனர். அவர்களை வரவேற்ற பட்டாச்சாரியார்கள் ஆண்டாள் சந்நிதிக்கு அழைத்துச் சென்றனர். ஐஸ்வர்யா மற்றும் பிரசன்னா இருவரும், சுமார் அரை மணி நேரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர், கோயிலுக்கு வெளியே உள்ள யானைக்கு பழங்களைக் கொடுத்தனர். பின்னர் மணவாள மாமுனிகள் சமாதிக்குச் சென்றனர். அதன் பின்னர் ஆண்டாள் கோயில் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகளிடம் இருவரும் ஆசி பெற்றனர். ஐஸ்வர்யா, பிரசன்னா கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவர்களை பார்க்க கோயிலில் குவிந்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.