பேட்ட முதல் நாள் முதல் காட்சியை ரஜினியின் குடும்பம் மற்றும் உறவினர்கள் அதிக விலை கொடுத்து பார்த்த விவகாரம் தெரியவந்துள்ளது.

ரஜினி சில நாட்களுக்கு முன்பு தனது படத்தை ரசிகர்கள் யாரும் அதிக விலைக்கு விற்கக் கூடாது என அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும், பேட்ட படம் வெளியான போது தமிழகத்தின் சில திரையரங்குகளில் ரசிகர்கள் அதிக விலைக்கு விற்றனர். மேலும், திரையரங்குகளின் கவுண்டரிலேயே முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.

குறிப்பாக ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட சிலர் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் பேட்ட படத்தை அதிகாலை 6 மணி காட்சியை கண்டு ரசித்தனர். அவர்களே ஒரு டிக்கெட் ரூ.900 விலைக்கு வாங்கித்தான் பார்த்ததாக பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தனது படத்தை அதிக விலைக்கு விற்கக் கூடாது என ரஜினி ரசிகர்களுக்கு மட்டும்தான் கூறினாரா?.. தியேட்டர் அதிபர்களுக்கு இல்லையா? என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், ரஜினியின் கருத்தை அவரின் குடும்பத்தினரே பின்பற்றவில்லை எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.