பேட்ட படத்தை பாராட்டி ரஜினி ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நேற்று வெளியான பேட்ட படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினி ஸ்டைலை இப்படத்தில் பார்ப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதேபோல், திரைத்துறையை சேர்ந்த பலரும் பேட்ட படத்தை டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினி ரசிகர் ஒரு வீடியோ பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மிகவும் ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார். இதுதான் ரஜினி படம். கார்த்திக் சுப்புராஜ் ஒரு ஜீனியஸ். அவர்தான் சிறந்த இயக்குனர். ரஜினியிடம் ஒரு ரசிகன் என்ன எதிர்பார்ப்பானோ அதை கார்த்திக் சுப்புராஜ் காட்டியுள்ளார். என்ன ஒரு இயக்கம்.. கிளைமேக்ஸ்.. ஆண்ட்டி கிளைமேக்ஸ்… ஒவ்வொரு காட்சியிலும் ரஜின் ஸ்டைல்.. ரஜினிதான் சூப்பர்ஸ்டார்.. 5-க்கு 5 ஸ்டார்கள் நான் அவருக்கு கொடுப்பேன். ரஜினிக்கு 5க்கு 200 மார்க் கொடுப்பேன். விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக் சிறிய கதாபாத்திரம். ஆனால், பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அவர்கள்தான் இனிமேல் சிறந்த துணை நடிகர்கள்” என உற்சாகத்துடன், ஆக்ரோஷத்துடனும் அவர் கத்தி கத்தி அவர் பேசியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதக்கண்ட பலரும்.. சரிடா. அதுக்கு ஏண்டா இப்படி கத்துற.. செத்து கித்து போயிடாத என கிண்டலடித்து வருகின்றனர்.