ரஜினி ரசிகர்களை அவரின் பேட்டை பட போஸ்டர் மிக கவர்ந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால் இளமை துடிப்புடன் மிக துள்ளலாக ரஜினி நடந்து வருவது போன்ற காட்சி, நிற்கும் காட்சி இது இரண்டுமே அட்டகாசமாக உள்ளது என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதே போல் இப்படம் நான் சிகப்பு மனிதன் படத்தின் கதையை போல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர். பகலில் அமைதியாக இருக்கும் ரஜினி இரவில் சைக்கோ கில்லராக மாறி எதிரிகளை வேட்டையாடும் கதை என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.