ரஜினி பணம் கொடுத்து சமூக விரோதிகளை ஊக்குவிக்கிறார்: யார் நீங்க என கேட்ட இளைஞர் பகீர் குற்றச்சாட்டு!

Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி சென்றார். அப்போது ஒரு இளைஞர் ரஜினியை யார் நீங்க என கேட்டது வைரலானது. இதனால் ரஜினி எரிச்சலடைந்து அதனை ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினார்.

மேலும் தூத்துக்குடி கலவரத்துக்கு காரணம் போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகளே என குற்றம் சாட்டினார். ரஜினியின் இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினிதான் அந்த சமூக விரோதிகளை பணம் கொடுத்து ஊக்குவிப்பதாக ரஜினியை யார் நீங்க என கேட்ட சந்தோஷ் ராஜ் என்ற இளைஞர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த இளைஞர் சந்தோஷ்ராஜ், இத்தனை நாட்களாக ரஜினிகாந்த் எங்கு இருந்தார்? இப்போது மட்டும் அவர் வர காரணம் என்ன? அவர் எங்களை சமூக விரோதிகள் என கூறுகிறார். நாங்கள் சமூக விரோதிகள் என்றால் எங்களுக்கு ஏன் ரஜினி பணம் தர வேண்டும்? பணம் கொடுத்து ரஜினி சமூக விரோதிகளை ஊக்குவிக்கிறாரா? ரசிகர் என்ற முறையில் ரஜினி கூறிய கருத்து எனக்கு வருத்தம் அளிக்கிறது என்றார்.