ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்களை தமிழக காவல்துறை சுட்டுக்கொன்ற சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்நிலையில் விவகாரம் பெரிதாக ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டு அரசானை வெளியிட்டது.

இந்நிலையில் இன்று தூத்துக்குடி சென்ற ரஜினிகாந்த் போராட்டத்தில் காவல்துறையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து பேசினார். அப்போது ஒரு இளைஞர் ரஜினியை பார்த்து யார் நீங்கள் என கேட்டார். இதனால் ரஜினி அவமானமடைந்தார். மேலும் அந்த இளைஞர் ரஜினியிடம் நாங்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தியபோது எங்கே இருந்தீர்கள் என கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் தூத்துகுடி சென்ற ரஜினி அரசுக்கும், ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கும் ஆதரவாக சமூக விரோதிகளால் தான் வன்முறை ஏற்பட்டதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராடிய மக்களை ரஜினி சமூக விரோதிகள் என சித்தரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.