பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0 திரைப்படம் வரும் ஜனவரியில் குடியரசு தினத்தன்று வெளியாகும் என்று லைகா நிறுவனத்தின் ராஜூமகாலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்

ஆனால் தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றில் இந்த படம் ஏப்ரலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த படம் ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 28ஆம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த ரஜினி....

ஜனவரியில் 2.0 ரிலீஸ் இல்லை என்பதால் டிக் டிக் டிக், தானா சேர்ந்த கூட்டம் உள்பட பல திரைப்படங்கள் பொங்கல் மற்றும் குடியரசு தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளன