சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் டீசர் வெகுவிரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் மர்ம நபர்கள் சிலர் இந்த படத்தின் முழு டீசரையும் இண்டர்நெட்டில் லீக் செய்துவிட்டனர். இதனால் ரஜினி, ஷங்கர் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கும் ரஜினியின் ‘காலா’ திரைப்படத்தின் டீசர் லீக் ஆன நிலையில் தனுஷ் அவசர அவசரமாக நள்ளிரவில் டீசரை வெளியிட்டார். இந்த அதிர்ச்சி மறைவதற்குள் தற்போது ரஜினி நடித்த இன்னொரு திரைப்படத்தின் டீசரும் லீக் ஆகியுள்ளது திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாக பார்க்கப்படுகிறது

ஒரு நிமிடம் 27 வினாடிகள் கொண்ட இந்த டீசர் உலகின் பல நாடுகளில் பொது இடத்தில் உள்ள ஸ்க்ரீன்களில் கூட வெளியாகியிருப்பது கொடுமையிலும் கொடுமையாக பார்க்கப்படுகிறது. ஷங்கரின் பாதுகாப்பு வளையங்களையும் மீறி இந்த டீசர் எப்படி வெளியானது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.