அமெரிக்காவுக்கு சூதாடத்தான் ரஜினி சென்றாரா? சுப்பிரமணியன் சுவாமி காட்டம்

உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா செல்வதாக கூறிய ரஜினி அங்கு கேசினோ கிளப்பில் சூதாடி வருவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தனது டுவிட்டரில் காட்டமாக தெரிவித்துள்ளார்

ரஜினிகாந்த் ஒரு 420 என்றும், அமெரிக்காவில் கேசினோ சூதாட்டம் விளையாடி தனது உடலை பரிசோதனை செய்து வருவதாகவும் கூறிய சுப்பிரமணியம் சுவாமி, கேசினோ விளையாடும் அளவுக்கு அவருக்கு எப்படி அமெரிக்க டாலர்கள் கிடைத்தது என்பதை அமலாக்கத்துறை விசாரணை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து என்று கூறிய சுப்பிரமணியம் சுவாமி, அமலாக்கத்துறை ரஜினியை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருப்பதால் ரஜினி வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் வருமான வரித்துறையினர் அல்லது அமலாக்கத்துறையினர் ரெய்டு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது