Darbar rajini Getup – தர்பார் படத்திற்கான கெட்டப்பில் ரஜினி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘தர்பார்’. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இதில் ரஜினி போலீஸாக வலம் வரவுள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடந்த 10ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பேட்டை படம் போலவே இப்படத்தில் ரஜினி இளமையான தோற்றத்தில் இருக்கிறார். அதை சிலர் இணையத்தில் பகிர, தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.