Rajini interview about Kashmir issue – காஷ்மிர் விவகாரத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் பலரும் அரசியல் ஆக்குகின்றனர் என நடிகர் ரஜினி வருத்தப்பட்டுள்ளார்.

இன்று மாலை போயஸ்தோட்டத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு ரஜினி கொடுத்த பேட்டியில் கூறியதாவது:

தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

கிருஷ்ணரும், அர்ஜுனரும் திட்டம் போடுவது ஒருவர் அதனை செயல்படுத்துவது ஒருவராக இருந்தார்கள். அதேபோல் காஷ்மீர் விவகாரத்தில் மோடியும் அமித்ஷாவும் ராஜாதந்திரத்தை கொண்டு காஷ்மீர் பிரச்னையை கையாண்டுள்ளனர். காஷ்மீர் பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவதிகளின் தாய்வீடாக இருக்கிறது. அவர்கள் அனைவரும் இந்தியாவில் ஊடுருவும் நுழைவாயிலாக காஷ்மிர் இருக்கிறது.

எனவே அங்கு இருக்கும் பயங்கரவாதிகளை 144 தடை உத்தரவு மூலம் வெளியில் வரமுடியாமல் ஒடுக்கி, பிரச்சனை செய்பவர்களை வீட்டுக்காவலில் வைத்து, நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரத்தை சில அரசியல்வாதிகள் அரசியலாக்குகின்றனர். எதை அரசியலாக்க வேண்டும் எதை அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

அப்போது அவரது அரசியல் பிரவேசம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘பொறுத்திருந்து பாருங்கள்’ என அவர் பதிலளித்தார்.

ஜம்மு காஷ்மீரில் அமுலில் இருந்த சிறப்பு சட்டம் 370ஐ ரத்து செய்யப்பட்டதை அதிமுக, பாஜக தவிர மற்ற எதிர்கட்சிகள் எதிர்த்து வரும் நிலையில், பாஜகவிற்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.