பேட்ட படம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என ரஜினி பேட்டியளித்துள்ளார்.

நேற்று வெளியான பேட்ட படம் ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுவான ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. நீண்ட வருடங்களுக்கு பிறகு பழைய ரஜினி ஸ்டைலை இப்படத்தில் பார்ப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். படம் நேர்மறையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதேபோல், திரைத்துறையை சேர்ந்த பலரும் பேட்ட படத்தை டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். பேட்ட படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு ரஜினிக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  சின்னத்திரை ‘பிரி’யா இப்போ வெள்ளித்திரையில் ‘பிஸி’ ஆகியுள்ளார்...!

இந்நிலையில், அமெரிக்கா சென்றிருந்த ரஜினி நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது தனது வீட்டின் அருகே செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். பேட்ட படம் எல்லோரையும் கவர்ந்துள்ளது. பழைய ரஜினியை பார்க்கிறோம் என எல்லோரும் கூறி வருகிறார்கள். இதை எப்படி உணர்கிறீர்கள் என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க பாஸ்-  டிரெண்டாகும் தலைவரின் ஆட்டம்! வைரலாகும் பேட்ட 'உல்லாலா'

அதற்கு பதிலளித்த ரஜினி “நான் அப்படி நடித்துள்ளது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதற்கு கார்த்திக் சுப்புராஜே காரணம். என்னை உசுப்பேத்தி உசுப்பேத்தி அவர் வேலை வாங்கினார்” என ரஜினி பதிலளித்தார்.