ஜிகர்தண்டா படத்தை மதுரையை சுற்றிய காட்சிகள் கொண்ட படமாக இயக்கி இருப்பார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இந்த படம் சில வருடங்கள் முன் வந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரஜினிகாந்த்தை வைத்து தனது புதிய படத்தை இயக்குகிறார், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து முடிந்து விட்டது.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து மதுரையை சுற்றி நடைபெறும் என தெரிகிறது.

இதில் ரஜினி கல்லூரி பேராசிரியராக நடிக்கிறாராம், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்காததல்ல 32 வருடங்களுக்கு முன் வந்த நான் சிகப்பு மனிதன் படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்திருப்பார்.

பகலில் கல்லூரி பேராசிரியர் இரவில் அநியாயம் செய்பவர்களை ஒடுக்கும் ராபின் வுட் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது போல அதிரடி காட்டுவாரா இல்லை அமைதியை விரும்பும் கல்லூரி பேராசிரியர் கதையா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.