சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் தீவிரமாக இறங்கியிருக்கும் இந்த நேரத்தில் நாளை ஆன்மீக பயணமாக இமயமலை செல்லவிருக்கிறார். சினிமா மற்றும் அரசியல் பணிகளுக்கு மத்தியில் ரிலாக்ஸ் செய்யும் விதமாக இந்த ஆன்மிக பயணத்தை மேற்கொண்டுள்ளார்

எம்ஜிஆா் பல்கலைகழகத்தின் 30வது ஆண்டுவிழாவை முன்னிட்டு அங்கு எம்ஜிஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்து மாணவா்கள் மற்றும் ரசிகா் மத்தியில் சிறப்புரையாற்றினார் ரஜினி. அவரது பேச்சை கேட்டு ரசிகா்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனா். ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியை என்னால் தரமுடியும் என்று பேசிய அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார்: ரசிகர்களின் அதிர்ச்சி கருத்து

ஒரு பக்கம் தனது கட்சியில் தொண்டர்கள் சோ்க்கும் படலம் வெகு ஜோராக நடைபெற்று வருகிறது. மாவட்ட வாரிய உறுப்பினா்கள் சோ்க்கும் பணியில் ரஜினி மும்முரமாக ஈடுபட்டார். அதுபோல தீவிர அரசியல் பணிகளுக்கிடையில் சினிமாவில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். ஏற்கனவே ரஜினி நடித்துள்ள காலா படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஷங்கா் இயக்கிய 2.0 படமும் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினி 166 ஷூட்டிங் - புதிய அப்டேட்

இந்நிலையில் இமயமலை செல்லும் ரஜினி சென்னையிலிருந்து விமானம் மூலம் இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு சென்று அங்கிருந்து தர்மசாலா,உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ரிஷிகேஷில் உள்ள பாபாஜி ஆசிரமத்துக்கு செல்லுகிறார். அங்கு ஆசிரமம் ஒன்றை கட்டியுள்ளார். தொடர் மழை மற்றும் சினிமா வேலைகள் காரணமா அதன் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. இதனால் அங்கு நடைபெற்றும் ஆசிரம விரிவாக்க பணிகளையும் பார்வையிட்டு ஒரு வாரம் தங்கிருந்து கவனித்து விட்டு சென்னை திரும்புகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  அம்மா கோவிலை திறக்கும் ரஜினிகாந்த்?