‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணி இணைந்து ‘காலா’ என்ற படத்தில் பணியாற்றி வருகிறது. மும்பை தாதாவாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையின் தாராவி பகுதியில் தொடங்கி, சென்னை, மும்பை என மாறி மாறி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  என்னா ஆட்டம் போட்ட..!தனுஷுக்கு செக் வைத்த விஷ்ணு விஷால்

இந்நிலையில், இப்படத்தில் ரஜினி தனது குடும்பத்தோடு இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கெனவே, ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியான போதும் சமூக வலைத்தளத்தில் அதிகமான வரவேற்பு இருந்தது. அதேபோல், இந்த புகைப்படத்துக்கும் நிறைய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  இவ்வளவு நாள் வந்த செய்திகள் எல்லாம் பொய்யா?

‘காலா’ படத்தில் ஹுமா குரேஷி, சமுத்திரகனி, அஞ்சலி பாட்டீல், நானா படேகர், சுகன்யா, ஈஸ்வரி ராவ், சாயாஜி ஷிண்டே, சம்பத், திலீபன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றன. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தனுஷ் தனது வுண்டார் பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.