ரஜினி, கமல் இருவரும் தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள். நடிக்க வந்து கிட்டத்தட்ட 40 வருடங்களை நெருங்குகிறது. நடிக்க வந்த புதிதில் இருந்து இவர்களை வெறித்தனமாக ரசித்த ரசிகர்கள் பலருண்டு.

கட் அவுட் அபிஷேகம், படம் வெளிவரவேண்டி கோவிலில் பூஜை செய்தல்,தங்க தேர் இழுத்தல்,கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தல் போன்ற இன்றைய ரசிகர்கள் பலர் செய்யும் காரியங்களுக்கு இந்த ரசிகர்களே முன்னோடிகள்.

இன்று இவர்களை போன்ற ரசிகர்களுக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும். மகன் மகளை திருமணம் செய்து பேரன் பேத்தி பார்த்த ரசிகர்கள் பலருண்டு.

இது போல பல ரசிகர்களிடம் பேசிப்பார்த்ததில் அவர்கள் கூறுவது,ரஜினி,கமல் இருவருமே ஆரம்ப காலத்தில் கொடுத்த மாஸ் திரைப்படங்கள்,வித்தியாசமான ஜனரஞ்சகமான திரைப்படங்கள் போன்றவற்றை வைத்துதான் அவர்களின் ரசிகர்களானோம்.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு தள்ளி போனது ஏன்? 

இவர்கள் இருவரும் ஜனரஞ்சகமான திரைப்படங்களில் நடித்தே பல வருடங்கள் ஆகிறது அதாவது பாட்டு ஹிட், காமெடி ஹிட், மாஸ் சண்டைக்காட்சிகள் , சரியான செண்டிமெண்ட் இவற்றுடன் கூடிய நல்ல திரைக்கதை அதாவது,தளபதி,மாப்பிள்ளை,அண்ணாமலை, அருணாச்சலம்,படையப்பா,சந்திரமுகி டைப் படங்களைத்தான் இந்த அடிப்படையில் குறிப்பிடுகிறார்கள்.

அதே போல் கமலஹாசனின்,அபூர்வ சகோதரர்கள்,இந்தியன் டைப் படங்களைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் இந்த மாதிரியான படங்களில் ரசிகர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் உண்டு பாடல் ஹிட்,காமெடி ஹிட்,செண்டிமெண்ட் ஹிட் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படங்கள் இருக்கும்.

ஆனால் நீண்ட நாட்களாகவே ரஜினி அவர்கள் அதாவது 2000ம் ஆண்டு தொட்டே வித்தியாசமான கதை என்று பாபாவில் நடித்து படம் தோல்வியடைந்தது. இடையில் வந்த சந்திரமுகி படம் மட்டுமே அனைத்து தரப்பினரையும் கவருவதாய் அமைந்தது பெண்களை தியேட்டருக்கு வரவழைத்தது.

இதையும் படிங்க பாஸ்-  பிகினி போட்டோவை வெளியிட்ட ரஜினி நாயகி

இப்பொழுது வந்த காலா,கபாலி கூட பல தரப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தது மேற்சொன்ன வகை எல்லாரும் ஏற்றுக்கொள்ள கூடிய ஜனரஞ்சகமான படங்களை ரஜினி கொடுக்க வேண்டும் என்பதே ரஜினி ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

அதேபோல் கமல் படங்களும் இவர் நடித்த விஸ்வரூபம், உத்தமவில்லன் போன்ற படங்கள்  சிரமப்பட்டு நடித்தாலும் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள முடியாத படம்.

சாதாரண நகர்ப்புறங்களில் உள்ள தியேட்டர்களில் பெண்கள்,குழந்தைகள்,குடும்பங்கள் கொண்டாடி மகிழும் படமாக இருக்க வேண்டும் என்பதே பலரின் எண்ணம் அந்த அடிப்படையில் பார்த்தால் கமலஹாசனின் பாபநாசம் படம் மட்டுமே அனைவரையும் கவர்ந்ததாய் அமைந்தது.

விஸ்வரூபம்,உத்தமவில்லன் போன்ற படங்கள் எல்லாம் ஏ செண்டர் என சொல்லப்படும் மாநகரங்களில் மட்டுமே அனைவராலும் விரும்பப்படுகிறது என்பதே உண்மை. பாமர மனிதர்கள் அனைவரும் கொண்டாடும் ஜனரஞ்சக படங்களே வெற்றியடைகிறது.

இதையும் படிங்க பாஸ்-  உங்க உடம்பில் ஓடுவது காங்கிரஸ் ரத்தமா- இல்லை என் ரத்தம் கமல் பதில்

இதை அவரின் ரசிகர்கள் பலரிடம் பேசிப்பார்த்ததில் அறிந்து கொள்ள முடிகிறது. இது போல படங்களில் ஒன்றாவது தாங்கள் சிறுவயதில் பார்த்த டைப் படத்தின் அடிப்படையில்

ரஜினி,கமல் இருவரும் சினிமாவை விட்டு அரசியலில் காலடி எடுத்து வரும் இந்த நிலையில் கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்பதே ரசிகர்கள் பலரின் எண்ணம்.

கார்த்திக் சுப்பராஜின் படம், கமலின் இந்தியன் 2 இதை நிறைவேற்றுகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதுபோல் ரஜினி,கமல் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதும் பல ரசிகர்களின் தீராத ஆசையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.