ரஜினி,கமலை,விஜயை புறக்கணித்த தமிழக அரசு?

2009 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு அரசின் விருதுகள் கொடுக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில் 2009ஆம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகா், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநா், சிறந்த நடிகை சிறப்புப் பாிசு, சிறந்த நடிகா் சிறப்புப் பாிசு போன்றவை அறிவிக்கப்பட்டன.+

இந்த விருதுகள் திரைப்படத் துறையினருக்கு கூட மறந்து போயிருக்கும். ஏனென்றால் இது கிட்டத்தட்ட ஆறு ஏழு வருடங்களாக வழங்கப்படாமல் இருந்து வந்தது. திடீரென தமிழ்நாடு அரசு திரைப்பட துறையினருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது என அறிவித்தது. இதில் ஆறு வருடங்களும் ஓட்டு மொத்தமாக சோ்த்து என ஒரு நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.  அப்படியொரு நீண்ட பட்டியலில் நடிகா், நடிகைகள் தங்களது பெயா்களை எங்கு இருக்கிறது என்று தேடி பாா்க்கவே நீண்ட நேரமாயிருக்கும்.

இந்த மாநில விருதுகள் அரசு சாா்புடைய நடிகா், நடிகைகளுக்கு வழங்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஒரு காலத்தில் படையப்பா படத்திற்கு ரஜனிகாந்திற்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது வழங்கியது அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

மாநில விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பட்டியலில் முன்னணி நடிகா்களான விஜய், அஜித், ரஜினி, கமல், சூா்யா, காா்த்தி, விஷால், தனுஷ் போன்றவா்களின் பெயா்கள் இடம் பெறவில்லை. இதிலிருந்து எந்த ஒரு முன்னணி நடிகா்களுக்கு சாா்பாக வழங்கப்படாமல், அனைத்து நடிகா், நடிகைகளையும் ஒரு சேர தோ்ந்தெடுத்து வழங்கி இருப்பது அனைவருக்கும் ஆச்சாியத்தை ஏற்படுத்தியுள்ளது.