காலா படத்தை அடுத்து ரஜினி தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.ஆனால் அட்லி,அருவி பட இயக்குனர் மற்றும் கார்த்தி சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டார். இதனால் ரஜினியின் அடுத்த படம் யாருக்கு என்று கோலிவுட்டே ஆவலாக இருந்தது. இந்த போட்டியில் வென்றிருப்பவர் கார்த்தி சுப்புராஜ், ஆம் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்.சன் பிச்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கிறார்.

ஏற்கெனவே ஜிகர்தண்டா படத்தை பார்த்த ரஜினி அதில் நடித்த பாபி சிம்ஹா வேடத்தில் தன்னை அணுகியிருந்தால் கண்டிப்பாக நடித்திருப்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் அரசியல் பயணம் என்னவோகும் என்ற எதிா்பார்ப்போடு அவரது ரசிகபெருமக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனா். இந்த படத்தின் படப்பிடிப்பு பற்றி எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்த படமானது அரசியல் பின்புலத்தை பற்றியதாக இருக்குமோ என்று பேசப்பட்டு வருகிறது. ரஜினி தீவிர அரசியலில் கால் பதித்துக்கொண்டும் இருக்கும் போது இப்படி யாருமே எதிா்பாராத வகையில் இந்த அதிகாரப்பூா்வ அறிவிப்பு சன் பிக்சா்ஸ் வெளியிட்டுள்ளது.