ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 22

ரஜினி படத்துக்கு எதிராக வதந்தி… தயாரிப்பாளர் தரப்பு விளக்கம்

08:25 மணி

Loading...

ரஜினி படத்துக்கு எதிராகக் கிளம்பிய வதந்தியை, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மறுத்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘2.0’. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வருட தீபாவளி ரிலீஸுக்குத் திட்டமிட்ட படம், நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 25ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், கிராபிக்ஸ் பணிகள் திட்டமிட்டபடி முடியாது என்றும், எனவே ஜனவரியிலும் படம் ரிலீஸாகாது என்றும் தகவல் பரவியது. இந்தத் தகவலை, தயாரிப்பாளரான ராஜு மகாலிங்கம் மறுத்துள்ளார். ‘பல நாடுகளில் கிராபிக்ஸ் வேலைகள் நடைபெற்று வருவதால், அறிவித்தபடி படம் ரிலீஸாகும்’ என அவர் தெரிவித்துள்ளார்

 

(Visited 22 times, 1 visits today)