அண்மைக்காலமாக ரஜினி கார்த்திக் சுப்பராஜ் படம் முடித்தவுடன் அடுத்த படம் உடனே செய்கிறார் தேர்தலுக்குள் செய்கிறார்.அந்த படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார்,கே.எஸ் ரவிக்குமார் இயக்குகிறார் என செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளன.

ரஜினியும் ரவிக்குமாரும் இணைந்து கொடுத்த படங்கள் பல படங்கள் வெற்றியின் எல்லையை தொட்ட படங்கள்.குறிப்பாக இவர்கள் காம்பினேஷன் முத்து படம் இங்கு ஓடியது மட்டுமல்லாது ஜப்பானிலும் டான்ஸிங் மஹாராஜ் என்ற பெயரில் வெளியாகி ஜப்பான் நாட்டு ரசிகர்கள் எல்லாம் தினமும் நாலு பேர் போயஸ் கார்டன் வந்து ரஜினியை சந்திக்கும் அளவுக்கு புகழ்பெற்ற படமாகி போனது.

கே.எஸ் ரவிக்குமாரின் படையப்பா உள்ளிட்ட படங்கள் மிகப்பெரும் வெற்றி பெற்றாலும் லிங்கா படுதோல்வி ஆனது.

இந்நிலையில் இருவரும் இணைந்து படம் செய்யும் திட்டம் இப்போதைக்கு இல்லை இது ஒரு வதந்தி என்று கே.எஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.