ரஜினி எப்போது அரசியலுக்குள் காலடி எடுத்து வைப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அரசியலுக்கு வரப்போவதாக சமீபத்தில் ரசிகர்களுடன் சந்திப்பு நடத்தியபோது சூசகமாக அறிவித்திருந்தார். ஆனால், அவர் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? அல்லது ஏதாவது ஒரு கட்சியுடன் இணைந்து செயல்படுவாரா? என்பதுதான் பலரது கேள்வியாகவும் இருந்து வந்தது.

பா.ஜ.க. கட்சி ரஜினியுடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறது. அதற்காக, பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள் அடிக்கடி ரஜினியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், யாருக்கும் ரஜினி செவி சாய்த்தபாடில்லை. இந்நிலையில், பிரதமர் மோடி அறிவித்த ஒரு திட்டத்திற்கு ரஜினி ஆதரவு கொடுத்துள்ளார். அது என்னவென்றால், தூய்மை இந்தியா திட்டம்தான்.

பிரதமர் மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டம் மூன்றாவது ஆண்டில் செயல்பட்டு வருகிறது. இதற்கான முழுமையான ஆதரவை ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தூய்மை இந்தியா திட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். தூய்மையே தெய்வீகமானது என்று கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் தூய்மை இந்தியா திட்டத்திற்கு தூதுவராக நடிகர் கமல்ஹாசனை பிரதமர் மோடி நியமித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.