ரஜினி தான் அடுத்த முதல்வர்: பிரபல ஜோதிடரின் ஆரூடம்!

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ரஜினி தான் என கணித்துள்ளார் பிரபல ஜோதிட வல்லுநர் ஞானேஸ்வரர். மேலும் பல சுவாரஸ்ய தகவல்களையும் இவர் கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜோதிடர் ஞானேஸ்வரர், இந்த ஆண்டு அரசியல் நிலைமை எப்படி இருக்கும் மற்றும் தனது இதற்கு முந்தைய கணிப்புகள் எந்த அளவுக்கு உண்மையாக இருந்தது என்பது குறித்தும் விளக்கினார்.

இதற்கு முன்னர் அவர், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும், தமிழகத்தில் ரஜினியும் அரசியலுக்கு வருவார்கள் என கூறியிருந்தார். முதலில் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தார். தற்போது நடிகர் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலிலும், அமெரிக்க அதிபர் தேர்தலிலும் அவர் கணித்தவாறே மோடி, டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றதாக கூறினார் ஞானேஸ்வரர்.

மேலும் ஐஸ்வர்யா ராயின் மகளும் அமிதாப் பச்சனின் பேத்தியுமான ஆராத்யா தனது பெயரை ரோகினி என மாற்றிக்கொண்டால் நிச்சயம் வருங்காலத்தில் அவர் பிரதமராகும் வாய்ப்பு உள்ளதாக கூறினார் ஜோதிடர் ஞானேஸ்வரர். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் வரும் தேர்தலில் ரஜினிகாந்த் வெற்றி பெற்று முதல்வர் ஆவார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் 2024-ஆம் ஆண்டு போர் நடக்கும் என்றார்.