Home விளையாட்டு இப்போதைக்கு தமிழ்நாடு பக்கமே வரமாட்டேன்: ரஜினிகாந்த் பேட்டி!

இப்போதைக்கு தமிழ்நாடு பக்கமே வரமாட்டேன்: ரஜினிகாந்த் பேட்டி!

நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் குதித்த பின்னரும் தனது சினிமா படப்பிடிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவர் நான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிவிட்டு வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாகவும் கூறினார்.

இதனையடுத்து ரஜினியின் ஒவ்வொரு பேட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்க மக்கள் ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் தூத்துக்குடி கலவரம் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கள் தமிழக மக்களிடையே சர்ச்சையையும் எதிர்ப்பையும் உருவாக்கியது. இதன் பிரதிபலிப்பாக அவர் நடித்து சமீபத்தில் வெளியான காலா திரைப்படம் தமிழகத்தில் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பை பெறவில்லை. தியேட்டர்களில் கூட்டமே இருக்கவில்லை.

இந்நிலையில் தனது அடுத்த படபிடிப்பை தொடங்கிவிட்டார் ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி.

அப்போது, காலா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது, நாடுமுழுக்க பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் அந்த மாநில அரசின் ஒத்துழைப்புடன் நன்றாக ஓடுகிறது என கூறிய ரஜினிகாந்த், தான் ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பில்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பை முடித்த பின்னர் தான் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறியுள்ளார்.