ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

மோடியை சந்திக்க ரஜினி திட்டமா? ரசிகர்கள் எடுக்கும் அதிரடி சர்வே!

11:12 காலை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 20 வருடங்களாக அரசியலுக்கு வருவது குறித்து பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் தற்போது ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் குதிப்பது சரியான நேரம் என்று முடிவு செய்த அவர் அதற்கான ஆரம்ப கட்ட பணியை தொடங்கிவிட்டு தான் ரசிகர்கள் முன் அரசியல் குறித்து பேசியுள்ளார்

தன்னுடைய அரசியல் பேச்சு இந்த அளவுக்கு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை எதிர்பார்க்காத ரஜினி, 1996ல் மிஸ் செய்த தனக்கான இடம் இன்னும் அப்படியே இருப்பதை உணர்ந்துள்ளதாகவும், எனவே இதுவே அரசியலில் குதிக்க சரியான தருணம் என்று அவர் முடிவு செய்துவிட்டதாகவும் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ரசிகர்களிடம் ரஜினி ஒரு முக்கிய பணியை கொடுத்துள்ளாராம். தமிழகத்தில் உள்ள தலையாய பிரச்சனை என்ன? அந்த பிரச்சனையின் தீர்வுக்கு என்ன வழி என்பது குறித்த ஒரு அறிக்கையை கேட்டுள்ளாராம். இந்த அறிக்கை தனது கையில் கிடைத்தவுடன் ரஜினி பிரதமரை சந்திக்கவுள்ளதாகவும், இந்த சந்திப்புக்கு பின்னரே அவர் தனது அரசியல் வருகையை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

The following two tabs change content below.
பிரிட்டோ

பிரிட்டோ

பத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393